என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க-விடாமுயற்சி டீஸர் பார்த்து மிரண்ட ரஜினி..
லைகா ப்ரொடக்ஷன் சுபாஷ்கரன் தயாரிப்பில், இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், அனிரூத் ரவிச்சந்தர் இசையில், அஜித் நடித்து பொங்கலுக்கு வெளிவர இருக்கும் “விடாமுயற்சி” படத்தி்ன் டீஸர் கடந்த 2 நாட்களுக்கு முன் ரிலீஸ் ஆனது. இத்திரைபடத்தில் திரிஷா,அர்ஜுன்,ரெஜினா,ஆரவ் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
பல நாட்கள் எதிர்பார்ப்பிற்கு பிறகு ரிலீஸ் அனா இத்திரைப்பட டீஸர் ரசிகர்களை உற்சாக படுத்தி வருகிறது. மக்கள் எங்கெல்லாம் கூட்டம் கூடுகிறார்களோ அங்கெல்லாம் “கடவுளே அஜித்தே” என்று கோஷம் போட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள். “எல்லோரும்,எல்லாமும்,கைவிடும் போது,உன்னை நம்பு” என்ற வாக்கியம் ரசிகர்களால் சமுகவலைத்தளங்களில் பெரிதும் பகிரப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நடிகர் ரஜினி “என்ன டா பண்ணி வெச்சிருக்கீங்க?” என்றும், இந்த டீசரை பார்த்துதான் மிரண்டு போனதாகவும், அஜித்திற்கு போன் செய்து டீசர் சூப்பராக உள்ளது என தெரிவித்ததாக கூறியுள்ளார். இது ரசிகர்களுக்கு மேலும் விடாமுயற்சி படத்தின் மேல்லுள்ள எதிர்பார்ப்பை பெருக செய்துள்ளது.