விடாமுயற்சி – தீம் மியூசிக் மேக்கிங் ஐ வெளியிட்டு ரசிகர்களை உற்சாக படுத்திய அனிரூத்

லைகா ப்ரொடக்ஷன் சுபாஷ்கரன் தயாரிப்பில், இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், அனிரூத் ரவிச்சந்தர் இசையில், அஜித் நடித்து பொங்கலுக்கு வெளிவர இருக்கும் “விடாமுயற்சி” படத்தி்ன் டீஸர் கடந்த 2 நாட்களுக்கு முன் ரிலீஸ் ஆனது இத்திரைபடத்தில் திரிஷா,அர்ஜுன்,ரெஜினா,ஆரவ் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
மேலும் இது 1997 இல் வெளிவந்த ஹாலிவுட் படத்தை தழுவி எடுக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது. ஹைவேஸ்இல் காணாமல் போன தனது மனைவியை தேடும் முயற்சியில் ஈடுபடும் கணவனாக அஜித் வலம் வருவார் எனவும் திரை வட்டாரங்களில் பேசப்பட்டது வருகிறது. டீசரில் ஒரு டயலாக் கூட இல்லை மற்றும் அனிருத்தின் இசையில் டீஸர் நகருவது இத்திரைபட டீசருக்கு மேலும் பலம் சேர்த்துள்ளது.
அனிரூத் படத்தின் தீம் மியூசிக் மேக்கிங் வீடியோ வெளியிட்டு மேலும் ரசிகர்களை உற்சாக படுத்தியுள்ளார். கடைசியில் வரும் தீம் மியூசிக் தியேட்டரில் வரும்போது கண்டிப்பாக ரசிகர்கள் “கடவுளே அஜித்தே” என்று கோஷம் போடுவதற்கு ஏற்ப இசை அமைத்துள்ளதாக தெரிவித்திருக்கிறார். மேலும் இது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.