ஹாலிவுட் இல் கால் பதிக்கும் நம்ம யோகி பாபு

New Project (28)

1985-ல் பிறந்த யோகி பாபு இன்று தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியனாகவும், குணச்சித்திர நடிகராகவும், ஹீரோவாகவும் வலம் வருகிறார். இவருடைய தந்தை ராணுவத்தில் பணியாற்றியதால், யோகி பாபு இளம் வயதிலேயே இந்தியாவின் பல மாநிலங்களுக்கு பயணம் செய்தார். ஜம்மு காஷ்மீரில் தனது சிறுவயதை கழித்தார். விளையாட்டு மற்றும் திரை உலகின் மீது இவருக்கு சிறு வயதிலேயே ஆர்வம் இருந்தது.

2000ஆம் ஆண்டு “லொள்ளு சபா” நிகழ்ச்சியில் நடிகராகவும் இணை இயக்குனராகவும் பணியைத் தொடங்கினார். 2009ல், இயக்குனர் அமீரின் “யோகி” திரைப்படத்தில் நடித்ததுடன், ‘யோகி பாபு’ என்ற பெயரில் பிரபலமடைந்தார். தொடர்ந்து, “யாமிருக்க பயமேன்” போன்ற படங்களில் நடித்தவர், தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக உயர்ந்தார்.

 

2024ல், 18 படங்கள் வெளியிட்டுள்ள யோகி பாபு, தற்போது ஹாலிவுட் படமான “Trap City”-யில் நடிக்க தயார் நிலையில் உள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed